அடிக்கடி வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமா?

உணவுகள் ஒத்துக்கொள்ளாமல் அல்லது ஒவ்வாமை பிரச்சனையால் வர கூடிய வயிற்று கோளாறுகளை போக்க பயன்படும் பொருட்கள்.
வயிற்று வலியால் அவதி படுவோர் கொத்தமல்லி இலைகளை கொண்டு கஷாயம் செய்து குடித்து வர வயிற்று வலிகள் குறைந்து , உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளும் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேற்றும் பண்பு கொண்டது.
இதன் சாற்றினை தினம் குடித்து வர வயிற்றில் எவ்வித தொற்றுகளும் தாக்காமல் நோய்களிடம் இருந்து நம்மை பராமரிக்கிறது மற்றும் முகத்திற்கும் பொலிவை தரும் விதத்திலும் பயன்படுகிறது.
உணவு குழாய்களில் சேரும் அசுத்தத்தை நீக்கும் மற்றும் நரம்புகளுக்கு வலு கொடுத்து திறம்பட செயல் பட செய்யும்.
உணவுகளினால் உணடாகும் வயிற்று கோளாறுகள் மற்றும் எரிச்சல், வயிற்றில் வெப்ப உணர்வை போக்குவது போன்ற செயல்களில் மிகவும் பயன் உள்ளதாக கருத படுகிறது கொத்தமல்லியில் தழைகள்.
சாம்பார்களில் மணம் ஊட்டும் விதமாக பயன்படும் இந்த இலைகள் ஜீரண கோளாறுகள் ஏற்பட்டால் அத்தனையும் சரி செய்யும் விதமாகவும் பயன்படுகிறது.