வேதி பொருட்கள் இல்லாமல் நரையை நீக்க வேண்டுமா?

முடிகளின் தோற்றத்தை மாற்ற வேண்டும் என்று எண்ணினால் அதற்கு உதவும் பூக்களினை பயன்படுத்தலாம்.
வெண்மை நிற முடியை நீக்க கறிவேப்பிலையை எண்ணெயுடன் காய்ச்சி பின் வடிகட்டி அதனை தினமும் தலைக்கு பயன்படுத்த முடி உதிர்வு கட்டுக்குள் வந்து, வெண்மை நிற முடி கருமை நிறமாக மாற்றம் பெறும் மற்றும் முடி நல்ல வளர்ச்சியையும் பெறும்.
வயதானவர்களுக்கு ஏற்படும் அதிக நரையை மறைக்க அனைவரும் பயன்படுத்தும் மருதாணியை பயன்படுத்தலாம். இதனை நன்கு அரைத்து கெட்டியான பதத்துடன் தலையில் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து சிறு நேரங்கள் கழித்து குளிக்க வேண்டும். உடனே மாற்றத்தை காணலாம். இதனை முடி நிறத்தை மாற்றி புதிய பொலிவான தோற்றத்தை பெற வேண்டும் என்று எண்ணுவோர்களும் பயன்படுத்தலாம்.
தேயிலையை குடிக்க பயன்படுத்துவது போலவே நம் முடி வளர்ச்சிக்கும் மற்றும் நரை முடியை போக்கவும் மிகவும் பயன்படுகிறது. இதனை நன்கு அரைத்து தலை முழுவதும் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும். தினமும் செய்து வர நரை முடி மாறும்.