எடையை குறைய வேண்டுமா, நாவினை கட்டுப்படுத்துங்கள்!

நீங்க அதிக எடையை கொண்டுள்ளீர்கள் என்றால் அதற்கு முக்கிய காரணமே உங்கள் நாவினை அடக்காமல் இருப்பது. நாம் உடல் பருமனை குறை வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாலும் ஏதேனும் உணவினை பார்க்கையில் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு எடை அதிகரிக்கும். அப்பொழுது அவர்களுக்கு அதிக ஊட்ட சத்துக்களை கொடுக்க வேண்டும் மற்றும் சுவை மிக்க உணவுகளை அதிகம் உட்கொள்ள விரும்புவார்கள். இதனால் அவர்களுக்கு விரைவில் எடை அதிகரிக்கும்.
எல்லோரும் விரும்புவது தங்களுக்கு பிடித்த உணவுகளையே உண்ண வேண்டும் என்பது. எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாலும் சுவைக்க வேண்டும் என்ற தூண்டுதலை நாக்கு கொடுக்கும், இதனை கட்டுப்படுத்தினால் உங்கள் எடையை குறைக்க நீங்கள் தயார் என்று சொல்லலாம்.
உணவு பழக்க வழக்கம் :
உணவுகள் என்றாலே கார உணவுகள், இனிப்பு பலகாரங்கள், எண்ணெய் பொரித்த உணவுகள், அதிக கொழுப்புகள் இருக்கும் உணவுகள் என அனைத்து உணவுகளும் சுவை மிக்கவையே, உட்கொள்வதில் ஆரோக்கியம் எது என்று தெரிந்து உண்ண வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
மாத்திரைகளில் கூட இனிப்பு சுவை கொண்ட மாத்திரைகளை தான் உண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாவிற்கு சுவை வேண்டும் என்று நினைப்பதை போலவே உடலுக்கு ஆரோக்கியம் வேண்டும் என்பதையும் மனதில் வைத்து கொள்ளுங்கள். சுவை மிக்க மாத்திரைகளை உட்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவினை அதிகரித்து கொழுப்புகளை சேர்க்கும், இதனால் உடல் பருமன் அடையும் மற்றும் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.
மேற்கூறியவைகளை மனதில் கொண்டு நாவிற்கு மட்டுமே சுவை அளிக்காமல் உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஊட்ட சத்துக்களை கொடுக்க உதவும் உணவு பொருட்களையே சாப்பிட ஆரம்பியுங்கள், அதுவே உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் பயன் உள்ளது.