Tamil Wealth

நாவல் பழத்தில் உள்ள சத்துகள் இவைகள்தான்!!

நாவல் பழத்தில் உள்ள சத்துகள் இவைகள்தான்!!

நாவல் பழங்களினைப் பொறுத்தவரை வாழை மரத்தினைப் போல் அனைத்துப் பாகங்களும் மனிதர்களுக்கு பெரிய அளவில் பயன் கொடுப்பதாகவே உள்ளது. கிராமங்களில் மட்டுமே சாப்பிடப்பட்டு வந்தப் பழமானது நகரங்களில் பெரிய அளவில் லாபகரமான அளவில் விற்றுத் தீர்கிறது.

அதற்குக் காரணம் நகர்ப்புறங்களிலும் இதன் மருத்துவ குணங்கள் தெரிந்ததால்தான். அதாவது நாவல் மரத்தின் பழங்களைக் காட்டிலும் விதைக்கே அதிக மவுசு உள்ளது. காரணம் அந்த விதையானது சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவினைக் குறைப்பதால் பலரும் இதனை வாங்கி உண்ணுகின்றனர்.

நாவல் பழமானது ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு, கல்லீரல் பிரச்சனைகள், பற்களை வலுவாக்குதல், சிறுநீர்ப்பை பிரச்சனைகள், செரிமானப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.

 இதன் இலையானது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதால், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடுகிறார்கள். மேலும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களும் நாவல் பழத்தினை சாப்பிடுவதுண்டு.

 மேலும் அல்சர் என்னும் குடற்புண்ணிற்கு நாவல் பழம் மிகச் சிறந்த மருந்தாக பரிசீலிக்கப்படுகின்றது. மேலும் இது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

Share this story