நடைப்பயிற்சி மனிதர்களின் வாழ்நாளினை குறைந்தது 5 வருடங்கள் அதிகரிக்கிறது!

முந்தைய காலத்தில் மருத்துவ மனைகளுக்கே செல்லாமலேயே மக்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தனர். ஆனால் தற்போது நாம் 40 ஐ நெருங்கும்போதே பட்டியலிட்டு சொல்லும் அளவு, நோய்களை உடலில் கொண்டுள்ளோம்.
அதற்குத் தீர்வுதான் என்ன என்று கேட்கிறீர்களா? முறையான உணவுப் பழக்கங்களும், சிறப்பான உடற்பயிற்சியும்தான். உடற்பயிற்சிகளில் மற்ற உடற்பயிற்சிகளைத் திடீரென ஆலோசனை இல்லாமல் துவக்கினால், உடலில் ஏதேனும் சில பாதிப்புகள் ஏற்படலாம்.
ஆனால் உடற்பயிற்சிகளில் நடைப்பயிற்சியானது எந்தவித பிரச்சினைகளையும் ஏற்படுத்தாத ஒரு பயிற்சியாகும், மேலும் நடைபயிற்சியானது அனைத்து வயதினரும் செய்ய ஏற்ற ஒன்றாகும். ஒருநாளைக்கு குறைந்தது 30 நிமிடம் நடைபயிற்சி செய்தாலே போதுமானது.
இது இதயம், ரத்த நாளங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யவும் செய்கிறது, எலும்பை வலுப்படுத்தவும், உடல் பருமனாக உள்ளவர்களின் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
உடலின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் தினசரி நடைப்பயிற்சியானது, மனிதர்களின் வாழ்நாளினை குறைந்தது 5 வருடங்கள் அதிகரிக்கும் என்றும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அதனால் நீங்கள் என்னதான் பிசியாக இருந்தாலும், இனி கட்டாயம் உடற்பயிற்சி செய்வீர்கள்தானே?