அனைத்து சத்துக்களையும் கொண்ட பொருள் முருங்கைக்கீரை தான்!!

நம் வீட்டில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பவைதான் முருங்கைக் காயும், முருங்கைக் கீரையும். இதில் உள்ள சத்துகள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.
அதாவது முருங்கைக் கீரை நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது. பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல வகையான டானிக்குகளை வாங்கிக் குடிப்பர்.
ஆனால் மிகவும் மலிவான முருங்கைக் கீரையினை கண்டுகொள்ள மாட்டார்கள். முருங்கைக் கிரையில் உள்ள வைட்டமின் சி எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் பழங்களைவிட அதிகமாகும்.
அதேபோல் இதில் வைட்டமின் A, வைட்டமின் B2, வைட்டமின் B3, கால்சியம் சத்து, புரோடீன், மெக்னேஷியம் சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம் சத்து என அனைத்துமே உள்ளது.
அதிலும் அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடும் ஆப்பிள், வேர்க்கடலை, கேரட், வாழைப்பழம், பால், முட்டை, மற்ற கீரை வகைகள் என மற்ற அனைத்திலும் உள்ளதைக் காட்டிலும் பல மடங்கு அதிகப்படியான சத்தினைக் கொண்டுள்ளது.
உண்மையில் இவ்வளவு சத்துகளையும் கொண்ட மலிவான ஒரு உணவு என்றால் அது முருங்கைக் காய், முருங்கைக் கீரைதான். முருங்கைப் பூவினை சாப்பிடுவதும் மிக நல்லது.