முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி

அழகை மேம்படுத்த பல நவீன முறைகள் இருந்தாலும் அவற்றால் பக்க விளைவுகளே அதிகம்.

நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறைகளை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.

  1. முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி பவுடரை ரோஸ் வாட்டரில் சேர்த்து கலந்து அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் ½ மணி நேரம் ஊறவிட்டு அதன் பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவ வேண்டும்.

இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் நன்கு பொலிவுடன் இருக்கும்.மேலும் பருக்களும் நீங்கும்.

  1. தேன் மற்றும் சர்க்கரை

தேனில் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அந்த கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் ஸ்கர்ப் செய்து அதன் பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவ வேண்டும்.

இதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் நீங்கி முகம் நன்கு பொலிவுடன் இருக்கும். மேலும் சருமம் மென்மையாகவும் இருக்கும்.

Share this story