Tamil Wealth

ஒருவரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து செய்யும் தவறுகள்!

ஒருவரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து செய்யும் தவறுகள்!

சாலையில் நடந்தோ அல்லது வாகனத்திலோ செல்லும் பொழுது யாருக்கேனும் ஏற்படும் விபத்தால் அவர்களுக்கு செய்யும் உதவிகளில் சிறு தவுறுகளையும் செய்கிறோம்.

தவறுகள் :

விபத்தில் அடிப்பட்டு ரத்தம் அல்லது காயங்கள் இருந்தால் அதற்கு மருந்து போட வேண்டும் என்று எண்ணி அப்படியே போட்டு விடுகிறோம் அப்படி செய்யாமல் முதலில் காயம் இருக்கும் இடத்தை நீரை கொண்டு நன்கு சுத்தம் செய்து பின் அந்த இடத்திற்கு பாதுகாப்பாக ஈக்கள் எதுவும் அண்டாமல் இருக்க மருந்து இருக்கும் பொருளை கொண்டு கட்ட வேண்டும்.

தூசுகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவது நம் கண்களை தான். கண்களில் சிறு தூசு விழுந்தாலும் உடனே கைகளின் விரல்களை கொண்டு கண்களை கசக்கி, அழுத்துகிறோம். இதனால் கண்களுக்கு கெடுதல் வர வாய்ப்பு இருக்கிறது. இப்படி செய்வதை தவிர்த்து மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம் அல்லது நீரினில் சென்று கண்களை காட்ட வேண்டும்.

ரத்த கட்டிய இடங்களில் ஐஸ் கட்டியை நேரடியாக வைக்க கூடாது. ஏதேனும் ஒரு துணியில் வைத்து பின் பாதிக்க பட்ட இடத்தில் வைக்க வேண்டும்.

Share this story