பாதத்தில் ஏற்படும் பாதிப்புகளை குண படுத்த உதவும் முறைகள்!

பாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை போக்கவும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை குண படுத்தும் இயற்கை முறையில் நீங்கள் செய்ய வேண்டிய சில சிகிச்சை முறைகளை தெரிந்து கொண்டு செய்து பயன் பெறுங்கள்.
#1
பப்பாளி பழத்தின் சதை பற்றினை கொண்டு தினமும் உங்கள் பாதங்களில் தேய்த்து வர நல்ல பலனை கொடுக்கும் அதோடு கொஞ்சம் எலும்பிச்சை பழத்தின் சாற்றினையும் கலந்து கொள்ள வெடிப்புகள் மறைந்து கால்கள் அழகான தோற்றத்துடன் இருக்கும் அல்லது எலும்பிச்சை சாற்றினை வெந்நீருடன் கலந்து கால்களை அதனுள் வைத்து கொண்டு 20 நிமிடங்கள் கழிந்த பின்னர் கால்களை எடுத்து விடுங்கள். இது உங்கள் கால்களில் இருக்கும் நுண் கிருமிகளை கூட அழித்து விடும்.
#2
பாதத்தில் இருக்கும் வறட்சியை போக்க வாழை பழத்தின் சதை பற்றினை பயன்ப்டுத்தவும், அதனுடன் அவோகேடா பழத்தின் சாற்றினையும் கலந்து கொள்ள நல்ல பலனை தரும். இதனை பயன்படுத்தி 15 முதல் 20 நிமிடங்கள் கழிந்து பிறகு கால்களை கழுவ வேண்டும்.
#3
பாதத்தில் இருக்கும் வெடிப்புகளால் கால்கள் அழகான தோற்றத்தை இழக்கிறது. இதற்கான சிறந்த தீர்வு ஓட்ஸ் மற்றும் ஜோஜோபா எண்ணெய் கலந்து பாதத்தில் பயன்படுத்த வெடிப்புகள் மறைந்து மென்மையான சருமத்தை கொடுக்கும். பயன்படுத்திய பின்னர் கழுவ வேண்டாம் துடைத்தாலே போதுமானது.
#4
பாதிப்பு இருக்கும் இடத்தில் எலும்பிச்சை சாற்றினை மசாஜ் செய்து அது காய்ந்த பிறகு மறுபடியும் பயன்படுத்துங்கள். இதனை 5 நிமிடத்திற்கு தொடர்ந்து செய்யுங்கள். சருமம் நல்ல அழகை கொடுக்கும்.