தியானம் செய்யுங்கள் உடலை மேன்மை படுத்துங்கள்!!

காலை எழுந்தவுடன் தியானம் செய்வதால் மன அமைதி அடைந்து அன்று நாள் முழுவதும் எவ்வித பிரச்சனை வந்தாலும் அதை சுலபமான முறையில் கையாளும் திறமை கிடைக்கும்.
தியானம் என்பது நாம் செய்யும் செயலில் மட்டும் இல்லாமல் நாம் சொல்லும் வார்த்தைகளிலும் இருக்கிறது.
அதிக வேலை பழுவால் நமக்கு ஏற்படும் மன கோளாறுகள் அனைத்திற்கும் சிறந்த தீர்வே இந்த தியானம். சிறிது நேரம் தியானம் செய்ய உங்கள் மன நிலை மாறி நிதானமான நிலைக்கு திரும்புவீர்கள்.
அதிகமான மன குழப்பதினால் ஏற்படும் நிம்மதி அற்ற நிலையில் இருந்து விடு பட சிறிது நேரம் தியானம் செய்ய பழகுங்கள். நல்ல உறக்கம், இயல்பான மன நிலை, சுறு சுறுப்பு தன்மை, உற்சாகத்துடன் செயல் பட செய்யும்.
தியானத்தில் மூச்சை உள் இழுத்து விடுதல் போன்றவை செய்வதன் மூலம் சுவாச கோளாறுகள் அனைத்தும் நீங்கும். தியானத்தை முடித்த உடன் உங்களுக்கு எப்படி பட்ட வேலையையும் முடித்து விடும் ஒரு ஆர்வம் கிடைக்கும்.