Tamil Wealth

மண மணக்கும் சாம்பாரின் மருத்துவம்!

மண மணக்கும் சாம்பாரின் மருத்துவம்!

எல்லோர் வீட்டிலும் சாம்பார் என்ற ஒன்றுதான் அடிக்கடி செய்வார்கள். ஆனால்அனைவரும் அதை விரும்புவது இல்லை. அதில்தான் அதிக காய்கறிகள், பருப்பு வகைகள் என அனைத்தும் அடங்கி இருக்கும். இதில் அடங்கி இருக்கும் சத்துக்களும் வைட்டமின்களும் அதிகமே.

உடல் எடையை குறைக்க விரும்புவோர் தங்கள் உணவில் சாம்பாரை சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட ருசி மிகுந்த உணவாக கருத படும். குறைந்த அளவே கொலஸ்ட்ராலை கொண்டு உள்ளதால் அதிக உடல் பருமனை கொண்டவர்கள் எடுத்து கொள்ளலாம் மற்றும் எளிதில் செய்யும் உணவாகவும் கருத படுகிறது.

நாம் சாம்பாரில் சேர்க்கும் ஒவ்வொரு காய்கறிகளிலும், பருப்பு வகைகளிலும், சாம்பார் பொடிகளிலும் சத்துக்கள் அதிகம் இருப்பதால் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து நோய் தொற்றுகள் வராமல் தடுக்கும்.

வயிற்று கோளாறுகள், வாயு தொல்லை போன்றவை அகலும் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஞாபக திறனுக்கும், அவர்களின் செயல் திறனுக்கும் தேவையான அனைத்து சத்துக்களும் இதில் அடங்கி உள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்க நல்ல ஆரோக்கியத்தை பெறுவார்கள்.

Share this story