நெருஞ்சி முள்ளில் இருக்கும் மருத்துவம்!
Thu, 7 Sep 2017

நெருஞ்சி செடியில் இருக்கும் மருத்துவ குணங்கள் :
நெருஞ்சி செடியை நன்கு காய்ச்சி அதன் சாற்றை மட்டும் குடித்து வர கண்களில் ஏற்படும் கோளாறுகள் குறைந்து பார்வை திறனையும் அதிகரிக்கும் மற்றும் விழித்திரையில் எவ்வித குறையும் வராமல் தற்காத்து கொள்ளும்.
- முட்கள் என்றாலே குத்தும் என்ற எண்ணம் வரும் ஆனால் இதில் இருக்கும் முட்களை கொண்டு மருத்துவம் செய்கிறார்கள். இதன் முட்களை நீருடன் சேர்த்து நன்கு காய்ச்சி அதனை அருந்த சிறுநீரக கோளாறுகள் நீங்கி அதனால் ஏற்பட கூடிய பக்க விளைவுகளையும் தடுத்து காப்பாற்றுகிறது.
- பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்து எவ்வித பாதிப்புகளும் வராமல் பாதுகாக்கும் வல்லமை கொண்டது.
- இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் உடலின் சூட்டை தணித்து நன்மை பயக்கும்.
- இதன் முட்கள் பயன்படுவது போலவே அதன் விதைகளும் பயன்படுகின்றன. விதைகளை நன்கு அரைத்து தூளாக்கி நீருடன் கலந்து குடிக்க கல்லீரலில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் மற்றும் கல் அடைப்பு வராமல் பராமரிக்கும். இதனுடன் தேன் கலந்தும் குடிக்கலாம்.