அமுக்கிரா தாவரத்தின் மருத்துவ குணங்கள்!
Mon, 4 Sep 2017

அமுக்கிராவின் இலைகள் பஞ்சு போன்ற தோற்றம் கொண்டது இதன் இலைகள் மட்டுமல்லாமல் வேர்கள், கிழங்குகள் மருத்துவ குணம் கொண்டதே.
அமுக்கிராவின் மருத்துவம் :
பூச்சிகளின் கடிகளாலோ அல்லது கீழ் விழுந்து ஏற்படும் அடிகளால் வரும் ரத்த கசிவு மற்றும் ரத்த கட்டுதலுக்கு அமுக்கிரா இலைகளை அரைத்து அதன் சாற்றை பாதிப்புக்குஉள்ளான இடத்தில் வைத்து அழுத்த, இதை தொடர்ந்து செய்து வர புண்கள் விரைவில் ஆறி விடும் மற்றும் ரத்த கசிவு உடனே நின்று விடும்.
அமுக்கிரா கிழங்கு :
அமுக்கிராவில் உருவாகும் கிழங்கை வேக வைத்து சமைத்து சாப்பிட ரத்தத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும் மற்றும் ரத்தத்தை சுத்திகரிக்கும், ரத்த ஓட்டத்தையும் சிறப்பாக செயல் பட செய்யும்.
- ஆண்மை குறைவு பிரச்சனைக்கு அமுக்கிரா கிழங்கை தினம் சாப்பிட நல்ல பலனை கொடுக்கும்.
- கிழங்கில் இருக்கும் கால்சியம் சத்து உடல் எலும்புகளுக்கு, பற்களுக்கு வலிமையை கொடுத்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும்.
- மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் மற்றும் மூளையில் ஏற்படும் அலற்சி போன்ற பிரச்சனைகளுக்கு நல்லதொரு அரு மருந்தாக கருத படுகிறது.