Tamil Wealth

புதினா இலையின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

புதினா இலையின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

புதினா இலையானது எவ்வளவுதான் விலை வாசி ஏறினாலும் 10 ரூபாய்க்கு ஒரு கட்டாகவே கிடைக்கிறது. இத்தகைய மலிவான புதினா இலையின் மருத்துவ குணங்கள் குறித்துப் பார்க்கலாம். புதினா இலையானது சைவ உணவுகளைவிடவும் அசைவ உணவு சமைக்கப்படும்போது அதிகம் பயன்படுத்தப்படக் காரணம் அது செரிமான சக்தியினை மேம்படுத்துவதால்தான் ஆகும்.

புதினாவானது உடலினைக் குளிர்ச்சியாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது, மேலும் அல்சர் என்னும் குடல் புண், வயிற்றுப் புண், தொண்டைப் புண், வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்கு புதினாவை நிச்சயம் எடுத்தல் வேண்டும்.

மேலும் புதினாக் கீரையினை ஜீஸாகவோ அல்லது சூப்பாகவோ எடுத்துக் கொண்டால் ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களின் உடல் எடையானது விறுவிறுவென குறையும். மேலும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளான வயிற்றுப் புழுக்கள், வயிற்றுப் பொருமல், ஒவ்வாமை, வாய்வுத் தொல்லை போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்படுகின்றது.

மூச்சுத்திணறல், ஆஸ்துமா, சளித் தொல்லை போன்றவற்றிற்கு மிகச் சிறந்த தீர்வாகவும் உள்ளது. மேலும் முதியவர்கள் அசைவ உணவுகளை உண்ட பின்னர் புதினா இலைகளை பத்தினை மென்று தின்றால், செரிமான மண்டலம் சீராகச் செயல்படும்.

 6 மாதக் குழந்தைகள் வயிற்று வலியால் அழுதால் புதினாவை தண்ணீர் விட்டு அரைத்து சங்கில் கொடுக்க வேண்டும்

Share this story