Tamil Wealth

முலாம்பழத்தின் மருத்துவ குணங்கள் இவைகள்தாம்!!

முலாம்பழத்தின் மருத்துவ குணங்கள் இவைகள்தாம்!!

முலாம்பழமானது பொதுவாக நாம் அதிக அளவில் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றாக இருப்பதில்லை. மிகவும் மலிவான விலையில் விற்கும் இந்த முலாம்பழத்தின் மருத்துவ குணங்கள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.

முலாம்பழம் வெயில் காலங்களில் அதிக அளவு மக்களால் விரும்பி வாங்கப்படக் காரணம் அது உடல் சூட்டினைத் தணித்து, உடலுக்குக் குளிர்ச்சியினை ஏற்படுத்துவதால்தான் ஆகும்.

மேலும் முலாம் பழமானது சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான சிறுநீர் போகும்போது எரிச்சல், நீர்க் கடுப்பு போன்றவற்றிற்குத் தீர்வாகவும், கர்ப்பிணி பெண்களுக்கு முலாம்பழத்தை கொடுத்தால் கரு வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

மேலும் முலாம்பழமானது மூல நோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கச் செய்கின்றது, மேலும் மலச் சிக்கல், வயிற்று வலி, செரிமானப் பிரச்சினைகள், பசியின்மை போன்றவற்றிற்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

மேலும் முலாம் பழமானது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யவும் செய்கின்றது.

 முலாம்பழம் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாகவும், கல்லீரலை சுத்தம் செய்வதாகவும் உள்ளது, மேலும் முலாம்பழல் அல்சர் என்னும் வாய்ப்புண், குடல் புண் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

Share this story