அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்!!

அத்திப்பழம் பெண்களின் கருப்பையினை வலுப்படுத்துவதாக உள்ளது, மேலும் 50 வயதுக்கும் அதிகமான பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கு அத்திப் பழமே மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது. மேலும் இதில் உள்ள கனிமப் பொருட்களானது மார்பக புற்றுநோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டது.
அத்திப் பழமானது அல்சர் என்னும் குடற்புண், வாய்ப்புண் போன்ற பிரச்சினைகளுக்கு பெரும் தீர்வாக உள்ளது. மேலும் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரித்து முடி கொட்டும் பிரச்சினை போன்றவற்றிற்கு பெரும் தீர்வாகவும் உள்ளது.
மேலும் இது பித்தம், வெள்ளைப்படுதல் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது, உடலின் செரிமான சக்தியினை மேம்படுத்தும் தன்மை கொண்ட அத்திப்பழம் வயிற்றுப் போக்கு, செரிமானப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.
அத்திப் பழம் சிறுநீரகக் கல்லடைப்பு, முறையான சிறுநீர்ப் பெருக்கம் போன்றவற்றிலும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் உடல் எடையினைக் குறைக்க விரும்புவோர் அத்திப் பழத்தை தினமும் இரண்டு என்றோ அல்லது ஜூஸாகவோ குடித்து வர வேண்டும்.
மலச் சிக்கல், கல்லீரல் வீக்கம், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு அத்திப் பழமே பலராலும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.