Tamil Wealth

பருத்தியில் இருக்கும் மருத்துவ குணாதிசயங்கள்!

பருத்தியில் இருக்கும் மருத்துவ குணாதிசயங்கள்!

பருத்தி என்றாலே அது மெத்தை, தலையணை போன்ற பொருட்கள் செய்வதற்கே அதிக பயன் உள்ளது. ஆனால் அதன் இலைகள், வேர்கள் போன்றவற்றில் இருக்கும் நன்மைகள் தெரிவது இல்லை, தெரிந்து கொள்ளலாம் வாங்க!

பிரம்மை :

பருத்தியின் இலைகளை எடுத்து கொண்டு அதனை சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதில் நீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பாதியளவு காய்ச்சி, அந்த நீரினை அருந்த கை, கால்களில் ஏற்படும் வலிகள் தீரும் மற்றும் நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளும் குண ஆகும்.

சிலர் தங்களாவே நினைத்து கொள்வது உண்டு, உடலில் வலி இருப்பதாக உணர்வார்கள். இதனை போக்கவும் பருத்தியின் இலைகளை பயன்படுத்தலாம்.

வயிற்று கோளாறுகள் :

உணவுகளால் ஏற்படும் செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்றில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனைகளுக்கும் மிகவும் உகந்தது.

உடல் வலிமை :

பருத்தியின் இலைகளில் இருக்கும் கொழுந்தை காய வைத்து, அதனை அரைத்து நீருடன் கலந்து குடிக்கலாம், இது கழிச்சலை குண படுத்தும் மற்றும் உடலுக்கு தேவையான வலிமையை கொடுத்து ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும்.

சிறுநீரக கோளாறுகள் :

பருத்தியின் இலைகளை அரைத்து அதனுடன் பாலினை கலந்து தினம் காலை அருந்தி வர மலச்சிக்கல் கோளாறுகள் நீங்கும் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கும் நல்ல மருந்தாக இருக்கும்.
வயிற்றில் இருக்கும் கடுப்பை போக்கவும் பயனுள்ளதாக கருத படுகிறது.

மருந்து :

அடிபட்ட இடங்களில் காயங்களை குண படுத்த பருத்தியின் விதை அல்லது பூவினை அரைத்து, பருத்தியின் பஞ்சை பயன்படுத்தி தொட்டு தொட்டு தடவ வேண்டும் அல்லது விதைகளின் தோலினை நீக்கி பாலுடன் கலந்து அரைத்து குடிக்க காயங்கள் விரைவில் குணம் ஆகும்.

Share this story