இருமல் மருந்தை தயாரிக்கும் முறை!

காய்ச்சல் ஏற்படும் போது ஏற்படும் இருமல் உடனடியாக சரியாகி விடும். ஆனால் அலர்ஜியால் ஏற்படும் வறட்டு இருமலை சரி செய்ய எத்தனை மருந்துகள் சாப்பிட்டாலும் இருமல் சரியாகாது. அப்படிபட்ட இருமலை சரி செய்ய உதவும் மருந்தை தயாரிக்கும் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்,
இருமல் மருந்து தயாரிக்கும் முறை:-
சிறிதளவு இஞ்சியை துறுவலாக எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் எலுமிச்சை பழத்தின் சாறு, தேன், தண்ணீர் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை பழத்தை துருவி நீரில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறினை அதில் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். பின்னர் அதனுடன் தேன் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை பாட்டிலில் ஊற வைத்து தினமும் மூன்று முறை சாப்பிட்டால் போதும்.
மற்றொரு முறையாக கிளிசரின், எலுமிச்சை சாறு மற்றும் தேன் மூன்றையும் நன்றாக கலந்து பாட்டிலில் ஊற வைக்க வேண்டும். இந்த கலவையை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.