துணி துவைக்கும் எந்திரத்தை பராமரிக்கும் முறை!
Sep 8, 2017, 19:35 IST

இன்று கைகளால் துவைக்கும் பழக்கம் சென்று எந்திரத்தின் மூலம் துவைக்கிறார்கள். அதனை பாதுக்காப்பாக வைக்க வேண்டும் அல்லவா.
- ஒவ்வொரு எந்திரத்தில் குறிப்பிட்ட அளவிலே துணிகளை போட வேண்டும் அளவுக்கு மீறி போட்டால் எந்திரம் பழுது அடையும்.
- துணிகள் துவைத்த பின் அப்படியே எந்திரத்தினுள் வைக்க கூடாது உடனே வெளியே எடுத்து காய போட வேண்டும். துணிகளில் நுரைகள் தென்பட்டால் இன்னொரு முறை அலசி விட்டு காய போடுங்கள் இல்லையென்றால் உடலில் அரிப்புகள் ஏற்படும்.
- துணிகளை துவைத்த பின் எப்பொழுதும் வடிகட்டியை சுத்தம் செய்ய வேண்டும். அதிகம் சாயம் போகும் துணிகளை சேர்த்து துவைக்க அனைத்து துணிகளிலும் சாயம் பிடித்து துணிகள் வீண் ஆகும்.
- துவைக்க உதவும் அதற்கான பொருட்களை பயன்படுத்துவதே நல்லது.
- எத்தனை துணிகள் போடுகிறோம் என்பதை கொண்டே நீரின் அளவை குறிப்பிட வேண்டும்.
- இதுவும் குளிர்சாதன பேட்டி போலவே தேவையான மின்சாரம் வேண்டும் மற்றும் இதனை துரு பிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் மற்றும் அதிகமான வெளிச்சம் படும் இடங்களில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.