விளாம்பழம் பற்றி பார்க்கலாமா??

விளாம் பழம் செரிமானத்தை சீராக நடை பெற இதை சர்க்கரையுடன் சேர்த்து சுவைக்க வேண்டும்.
ஞாபக திறனை அதிகரிக்க தினம் இரு விளாம் பழம். இதனை கஷாயம் செய்து குடித்து வர மூச்சு திணறல், இருமல் ஆகியவற்றிக்கு நல்லது.
அடிக்கடி ஏற்படும் தலை சுத்தல், தொடர் வாந்தி அதனால் ஏற்படும் மயக்கம் ஆகியவற்றிக்கு, மற்றும் பித்த பிரச்சனைகளுக்கு விளாம் பழத்தை பாலுடன் சேர்த்து குடிக்கலாம்.
நரம்பில் ஏற்படும் கோளாறுகளுக்கும் விளாம் பழம் நல்லதொரு மருந்து. சிறு குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் சாப்பிடலாம்.
இதில் அடங்கி உள்ள சத்துக்கள் அனைத்தும் ரத்தை சுத்திகரித்து ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ள மிகவும் பயன்படுகிறது. அல்சரால் அவதி படுவோர் தினம் ஒரு பழம் சாப்பிட குணமடையும் மற்றும் பற்களில் ஏற்படும் கோளாறுகளுக்கும் விளாம் பழம் நல்ல பலனை கொடுக்கும். வாய் புண்ணை சரி செய்யவும் பயப்படுகிற விளாம் பழம், வயிற்று புண்ணையும் குணபடுத்தும்.