ஆரோக்கியமாக வாழனுமா? தினமும் இந்த ஜூஸை குடிங்க!

ஆரோக்கியமாக வாழனுமா? தினமும் இந்த ஜூஸை குடிங்க!

இன்றைய சூழலில் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இதற்கு முக்கியமான காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மட்டுமே. நோய்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்து இருப்பது அவசியமாகும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஜூஸ் வகைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

ஆரோக்கியமாக வாழனுமா? தினமும் இந்த ஜூஸை குடிங்க:-

 

  • மாதுளை மற்றும் திராட்சை ஜூஸை தினமும் காலை உணவின் போது குடிப்பது மிகவும் நல்லது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். இந்த ஜூஸுடன் சிறிது மிளகு தூள் அல்லது உப்பு சேர்த்து கொண்டால் சுவை அதிகமாக இருக்கும்.
  • சுரைக்காய், பாகற்காய், இஞ்சி, மற்றும் புதினா ஜூஸை சர்க்கரை நோயாளிகள் குடித்து வந்தால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
  • புதினா, கேரட், மாதுளை, மற்றும் இஞ்சி ஜூஸை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுவதோடு மட்டுமில்லாமல் செரிமான மண்டலத்தையும் முறையாக இயங்க செய்யும்.
  • கொத்த மல்லி, வெள்ளரிக்காய், பாகற்காய் இதில் ஏதாவது ஒரு ஜூஸை குடித்தால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் பாதுகாக்கலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல பயனை தரும்.
  • பீட்ரூட், மாதுளை, மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸை குடித்து வருவதால் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கலாம். வாரத்திற்கு 2 முறையாவது இதை குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

Share this story