மெத்தையில் படுப்பதை தவிர்த்து பாயில் படுத்து பாருங்கள்!!
Tue, 5 Sep 2017

மெத்தையில் படுக்க தூக்கம் வருவது தடை படலாம் அதுவே பாயில் படுத்து தூங்க நல்ல ஆழ்ந்த உறக்கத்தை பெறலாம் அதனால் இரவு நேரங்களில் உடம்பில் சுரக்கும் சுரப்பிகள் சீராக சுரக்க உதவும் மருத்துவ குணம் கொண்டது.
மழை காலங்களில் ஏற்படும் வெப்ப சலனத்தால் உடலுக்கு கேடு விளைவிக்காமல் நம்மை பராமரிக்க பாயில் படுப்பதே சிறந்தது.
- பாயில் படுக்க முதுகில் இருக்கும் நரம்புகள் மற்றும் தசைகளை வலு பெற செய்து, இடுப்பு தசைகளுக்கும் எலும்புகளுக்கும் உறுதியை கொடுக்கிறது.
- வாத நோயில் இருந்து விடுதலை பெறலாம் மற்றும் உடலில் இருக்கும் சூட்டை தணித்து குளிர்ச்சியை கொடுக்கும் ஆற்றல் கொண்டது.
- பாய்களில் பல வகைகள் உள்ளன அவற்றில் தாழைப்பாயில் படுத்து உறங்க நமக்கு எவ்வித
- கோளாறுகளும் ஏற்படாமல் ஒவ்வாமையால் ஏற்படும் தலை சுத்தல், உணவுகள் ஒத்துக்கொள்ளாமல் வர கூடிய வாந்தி போன்ற பிரச்சனைகள் வராமல் நம்மை தற்காத்து கொள்ளும் பண்பு கொண்டது.
- பாய்களில் பயன்படுத்தும் நரம்புகளின் மூலம் சீத பேதி நம்மை அணுகாமல் பாதுகாக்கிறது.