Tamil Wealth

பல நோய்களை தீர்க்கும் அதிமதுரம்!

பல நோய்களை தீர்க்கும் அதிமதுரம்!

கோடைகாலங்களில் இதன் சாற்றை அருந்த நல்ல குளிர்ச்சியை தரும். வலிப்பு நோய்களை தடுக்கும் தன்மை கொண்டது. அரிப்புகளால் ஏற்படும் தழும்புகளையும் குண படுத்தும்.

முடி வளர்ச்சி :

அதிமதுரத்தை அரைத்து அதன் பொடியை தலையில் பயன்படுத்த முடி உதிர்வு குறைந்து நல்ல முடி வளர்ச்சியை பெறலாம் மற்றும் பொடுகு தொல்லைகள் நீங்கும்.

ரத்த கட்டுப்பாடு :

ரத்த கசிவு ஏற்படும் இடங்களில் இதனை பயன்படுத்த ரத்தம் கசிவு நிறுத்தப்படும் மற்றும் அதனால் ஏற்படும் புண்களை குண படுத்தும்.

அதிமதுர இலைகள் :

இதன் இலைகளை அரைத்து பயன்படுத்த தலை சுத்தல், வாந்தி, மயக்கம் போன்றவை அணுகாது மற்றும் இதன் இலைகள் சுவை மிக்கவையே.

அதிமதுர சத்துக்கள் :

இதில் அடங்கி இருக்கும் வைட்டமின்கள், கால்சியம் சத்துக்கள் எலும்புகளுக்கு வலிமையை கொடுத்து செயல் பட செய்கிறது மற்றும் உடல் சோர்வு, பார்வை குறைபாடுகளையும் சரி செய்யும் நிவாரணியாக பயன்படுகிறது. மஞ்சள் காமாலை நோயில் இருந்து தற்காத்து கொள்கிறது.

Share this story