சிலருக்கு அழகை கொடுக்கும் சுருட்டை முடிகள் பற்றி பார்க்கலாம்!

அழகான தோற்றத்தை தரும் இந்த சுருள் முடிகள் எப்படி அழகை கொடுக்கிறதோ அதேபோல் சில கோளாறுகளையும் தரும், சுருள் முடி என்பதால் முடி அதிக சிக்கல்களை வழிவகுக்கும். அந்த சிக்கலை போக்கும் பாடு பெரும்பாடாக இருக்கும்.
சுருட்டை முடி, முடி பராமரிப்பு :
சுருள் முடியும் ஒரு வித அழகே. இதனை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கென்று விற்பனை ஆகும் ஷாம்பு, எண்ணெய் போன்ற பொருட்களை வாங்கி உபயோகியுங்கள்.
முடிகளில் உருவாகும் சிக்கல்களை போக்க மற்ற துணிகளை பயன்படுத்துவதை தவிர்த்து காட்டனால் உருவான துணியை உபயோகிக்க உங்கள் சுருள் முடிக்கு சிக்கல்களை ஏற்படுத்தாமல் பராமரிக்கும் ஆற்றல் கொண்டது.
குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயை தலைக்கு நன்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து சுருள் முடிக்கு என்று இருக்கும் ஷாம்பு தேய்த்து குளிக்க முடி அழகான தோற்றத்துடன் இருக்கும் மற்றும் முக அழகையும் கொடுக்கும்.
நாம் உபயோகிக்கும் சீப்பினை பொறுத்து சுருள் முடி அமையும். பெரிய பற்களை கொண்ட தலையினை வாற முடிகள் நல்ல ஆரோக்கியத்தை பெறும்.