உடல் பருமனா, குறைக்கணுமா என்னவெல்லாம் செய்யலாம் பார்ப்போமா?

முதலில் தினமும் தண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள், அது நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை உடனடியாகவே வெளியேற்றிவிடும்.
சீரகத்தை தண்ணீருடன் போட்டு நன்கு ஊறிய பிறகு வெறும் தண்ணீருக்கு பதிலா இதை குடித்து வர உடல் எடையை குறைக்க உதவும்.
உணவில் அதிமாக வெங்காயத்தை சேர்த்து கொள்ளுங்கள் அது நம் உடலில் சேரும் கடின உணவுகளை செரித்து விடும்.
காலை உணவாக இட்லி,தோசையும், மதியம் சாதத்திற்கு பதிலாக மாதுளை பழத்தையும், இரவு சப்பாத்தியும் எடுத்து கொள்ளுங்கள் உடல் எடை குறைவதை பார்க்கலாம்.
எண்ணெய் சம்மந்தமான உணவுகளை தவிர்த்து கீரை, பயறு வகைகள், கோதுமை உணவுகளை சாப்பிடுங்கள்.
மேற்கூறியவை எல்லாத்தையும் கடைபிடித்தாலே உடல் எடை குறைந்து விடும், அதனுடன் தினமும் காலை அரை மணி நேரம் நடந்தால் விரைவில் குறையும்.
உடல் எடையை குறைப்பதில் மிக முக்கிய ஒன்று வாயை கட்டுப்படுத்தியே தீர வேண்டும். எல்லாம் செய்து விட்டு வாயை கட்டுப்படுத்தவில்லை என்றால் அதில் எந்த பயனும் இல்லை.