Tamil Wealth

தலை முடி பராமரிப்பு உதவும் கற்பூரம் பற்றி பார்க்கலாம்!

தலை முடி பராமரிப்பு உதவும் கற்பூரம் பற்றி பார்க்கலாம்!

கற்பூரத்தை திரவ நிலைக்கு காய்ச்சி வைத்து கொண்டு தலை முடிக்கு பயன்படுத்த தலையில் இருக்கும் பொடுகு தொல்லைகள் நீங்கும் மற்றும் முடி உதிர்வு கட்டுக்குள் வரும்.

செய்முறை :

கற்பூரத்தை நன்கு காய்ச்சி பாகு பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடவும். இந்த பாகுவுடன் நாம் தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன் கலந்து தலையில் நன்கு தேய்க்க வேண்டும். சிறிது நேரங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இது தலையில் பொடுகுகள் வருவதை தடுத்து முடிகளை பராமரிக்கும்.

தயிரை கொண்டு பொடுகை போக்க வேண்டுமா?

கற்பூர பாகுவுடன் தயிரினை கலந்து முடிகளில் அனைத்து புறங்களிலும் நன்கு தேய்த்து பின் குளிக்க முடி உதிர்வு கட்டுக்குள் வரும் அல்லது தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு அல்லது ஏதேனும் ஒன்றில் சிறிது கற்பூர எண்ணெயை கலந்து தேய்த்து குளிக்க பொடுகு இருக்காது.
முடிகளை ஒழுங்காக பராமரிக்காமல் வெயிலின் தாக்கத்தினால் முடி உதிர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது, அதனை சரி செய்யும் விதத்தில் கற்பூர எண்ணெயை தினம் தலைக்கு தேய்த்து வரலாம்.

Share this story