வல்லாரை கீரை பற்றி தெரிந்து சாப்பிடலாம்!!
Fri, 1 Sep 2017

பார்ப்பதற்கு நன்கு அகன்ற இலைகளை கொண்ட வல்லாரை கீரையை சமைத்து சாப்பிட நாம் பல ஆரோக்கியத்தை பெறலாம். கீரையில் சாப்பிடுவதில் கட்டுப்பாடு வேண்டும்.
வல்லாரை கீரை :
காயங்கள் மற்றும் தழும்புகள், ரத்த கட்டுதல் அனைத்திற்கும் இதன் சாற்றை பிழிந்து தினம் பயன்படுத்த விரைவில் குணம் அடையும்.
- நரம்புகள் மற்றும் எலும்புகள் அனைத்தும் வலு பெறும். ஆசியாட்டிக்கோசைடு தொழு நோய் உள்ளவர்களுக்கு அவசியம் தேவையே. வல்லாரை கீரையில் அதிகம் காணப்படுகிறது.
- நினைவாற்றலை அதிகரித்து செயல் பட இதை உணவில் சேர்த்து கொள்ளலாம். சிறு குழந்தைகளுக்கு தேவையான அறிவு திறனை கொடுக்கும் வல்லாரை கீரையை இஞ்சி, வெள்ளை பூண்டு, சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
சரும பிரச்சனைகள் மற்றும் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்ட சத்துக்களும் அனைத்தும் அடங்கி உள்ளன.
மூளையின் நரம்புகள், ஆரோக்கியமான திறனுக்கு வெறும் வயிற்றில் கூட வல்லாரை கீரையை நன்கு சுத்தம் செய்து தினம் இரண்டு இலைகள் சாப்பிடு வரலாம்.