மருத்துவ குணங்கள் கொண்ட வாழையின் இலைகள்!
Sep 10, 2017, 16:45 IST

- சுப நிகழ்ச்சிகளில் வாழை இலையில் சாப்பாடு பரிமாறுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள். இது நமது உடலுக்கு கொடுக்கும் ஆரோக்கியம் தெரியுமா, தெரிந்து கொள்ளலாம்.
- சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைக்கும் தினம் உணவுகளை தட்டில் வைத்து சாப்பிடுவதை தவிர்த்து இலைகளில் சாப்பிட நல்ல பலனை கொடுக்கும்.
- நாம் உணவில் பயன்படுத்தும் வாழை இலைகளை சாப்பிட்ட பின் வீணாக்குகிறோம் அதையும் மாடு, ஆடு போன்றவை உணவாக எடுத்து கொள்கின்றன. பிளாஸ்டிக் இலைகளை போட்டால் அவைகளை சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும்.
- வாழை இலையில் உணவுகள் சாப்பிட அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமக்கு கிடைத்து வயிற்று கோளாறுகளை குண படுத்தும் தன்மை கொண்டது.
- தலை முடி வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் வாழை இலைகள் பயன்படுகின்றன.
- இலைகள் என்றதும் காகித இலைகள் மற்றும் பிளாஸ்டிக் இலைகளை எல்லாம் பயன்படுத்த கூடாது அது நம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
- வாழையில் இருக்கும் பச்சைய நிறமிகள் செரிமான உறுப்புகளை வலு பெற செய்து செரிமானத்தை சீராக நடத்தும்.