Tamil Wealth

அழகை அள்ளி தரும் ஸ்ட்ராவ் பெர்ரி பழத்தின் நற்குணங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

அழகை அள்ளி தரும் ஸ்ட்ராவ் பெர்ரி பழத்தின் நற்குணங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!
  • சிவப்பு நிற பழங்கள் என்றாலே அதில் அதிக அளவில் ஆரோக்கியமும், அழகும் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஸ்ட்ராவ் பெரியில் இருக்கும் ருசியை போலவே அதில் இருக்கும் நிறமிகள் நம் சருமத்திற்கு கொடுக்கும் அழகும் அற்புதமானது.

செய்முறை :

ஸ்ட்ராவ் பெர்ரி பழத்தை இரு துண்டுகளாக வெட்டி சாற்றுடன் முகத்தில் தினம் தடவி வர முகம் பள பளக்கும். விட்டமின் சி மற்றும் எலாகிக் ஆசிட் போன்றவை அதிகம் காண படுவதால் முகத்தின் பராமரிப்பு மிகவும் உகந்தது. உதடுகளின் நிறத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினம் ஒரு ஸ்ட்ராவ் பெர்ரி பழத்தை நறுக்கி சாற்றினை உதடுகளில் தடவ வேண்டும் அதனுடன் எலும்பிச்சையையும் சேர்த்து கொள்ளலாம்.

பற்களின் சுத்தம் :

பற்களில் படியும் கறைகள் மற்றும் மஞ்சள் தன்மையை போக்கவும் ஸ்ட்ராவ் பெர்ரி பழத்தின் சாற்றினை பயன்படுத்தலாம். பற்களுக்கு உறுதியையும் கொடுக்கும். இதில் இருக்கும் கால்சியம் எலும்புகள் மற்றும் பற்கள், நக வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது.

முக அழகை பெற :

ஸ்ட்ராவ் பெர்ரியை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அதனுடன் எலும்பிச்சை சாறு, ரோஸ் வாட்டர் கலந்து அதனை முகத்தில் தடவி பின்னர் ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்தை துடைக்க வேண்டும் இல்லையென்றால் அந்த கலவையை அப்படியே குளிர் சாதன பெட்டியில் வைத்து சில நேரங்கள் கழிந்த பின்னர் முகத்தில் உபயோகிக்க மென்மையான அழகான சருமத்தை பெறலாம்.

சரும கோளாறுகள் :

சருமத்தில் ஏற்படும் தழும்புகள், பருக்கள், மரு, அரிப்புகள், ரத்த திட்டுகள் குணம் ஆக ஸ்ட்ராவ் பெர்ரியின் சாறுடன் தேனை கலந்து பாதிப்பு உள்ளன இடத்தில் தினம் பயன்படுத்துங்கள் மாற்றத்தை நீங்களே காணலாம்.

Share this story