தவசி கீரை நன்மைகள் தெரிந்து எடுத்து கொள்ளுங்கள்!!
Tue, 5 Sep 2017

தவசி கீரை யாரும் கேள்விப்படாத ஒன்றாக கருதப்படலாம். இதில் அடங்கி இருக்கும் வைட்டமின்கள் நமக்கு கொடுக்கும் நலன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
தவசி கீரை :
வைட்டமின் எ, வைட்டமின் பி , வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே போன்றவை அடங்கி உள்ளதால் இதை சமைத்து சாப்பிட கிடைக்கும் ஆரோக்கியம்.
ரத்தத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும் மற்றும் கெட்ட ரத்தங்கள் வெளியேற்ற பட்டு ரத்தத்தை சுத்திகரித்து உற்பத்தி செய்யும்.
- கீரைகளை சமைத்து சாப்பிடுவதை விட அதை சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட அதில் இருக்கும் சத்துக்கள் நமக்கு நோய் எதிர்ப்பு திறனை கொடுத்து புற்று நோய்க்கான செல்கள் உருவாவதை தடுக்கும் தன்மை கொண்டது.
பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் காண படுகிறது .
பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் நம் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் மற்றும் மூளையின் செயல் பாடுகளையும் சிறந்த முறையில் செயலாற்ற உதவுகிறது.