Tamil Wealth

சருமத்தின் அழகிற்கு பயன்படுத்தும் பொருட்களை பற்றி தெரிந்து கொண்டு உபயோகியுங்கள்!

சருமத்தின் அழகிற்கு பயன்படுத்தும் பொருட்களை பற்றி தெரிந்து கொண்டு உபயோகியுங்கள்!

அழகை கொடுக்கும் என்று உபயோகிக்கும் பொருட்களை பற்றி தெரிந்து கொண்டு இனி பயன்படுத்தி பயன் அடையுங்கள்.

சருமத்தில் ஏற்படும் கோளாறுகளை போக்க உதவும் பொருட்கள் :

முகத்தில் உருவாகும் பருக்கள், கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், எண்ணெய் கசடுகள், சுருக்கங்கள் போன்றவைகளை குண படுத்தவும் மற்றும் தடுக்கும் வகையிலும் பயன்படும் க்லைக்கோலிக் அமிலம் இருக்கும் பொருட்களை உபயோப்படுத்துகிறார்கள்.

  1. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சளின் நற்குணங்களை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள். மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படும் சோப்பு, பவுடர், பேஸ் வாஷ் போன்றவைகளில் அதிகம் இருக்கும் குர்மின் சருமத்தை பராமரிக்கிறது. அதிகமான உடல் சூட்டினால் ஏற்படும் கொப்பளங்கள், தழும்புகள், ரத்த கசிவுகளை போக்கவும் உதவுகிறது.
  2. சருமத்தில் உருவாகும் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை நீக்க உதவும் பொருட்களில் இருக்கும் நிறமிகள் நல்ல பலனை கொடுக்கும். முகத்தை பழைய நிலைக்கு மாற்றும் வகையில் சருமத்தில் இருக்கும் கொலாஜென் மற்றும் கிளைகோசமினோக்லைக்கன் அதிகமாக உருவாக்கப்பட்டு சருமத்தை நல்ல பொலிவுடன், பளிச்சென்று வைத்து கொள்ள உதவுகிறது.
  3. சருமத்திற்கு தேவையான கொழுப்புகளை அதிகரிக்க செய்து அழகை கொடுத்து ஆரோக்கியத்துடன் வைக்கும் நியாசினாமிட் முகத்தில் இருக்கும் கருமை நிறத்தை மாற்றி வெண்மை நிறத்தை கொடுக்கும் மற்றும் காயங்களால் ஏற்படும் வீக்கம், ரத்த கட்டிகளை குண படுத்த உதவும்.
  4. சிறு வயதில் இருக்கும் எலாஸ்டின் வயது முதிர்ந்த பிறகு விரைவில் குறைய தொடங்கும். இதனை உற்பத்தி செய்யும் வகையில் தேவையான நிறமிகள் அடங்கி இருக்கும் பொருட்களை உபயோகியுங்கள் மற்றும் கொலாஜென் சருமத்தில் அதிகரிக்க நல்ல பொலிவை தரும் மற்றும் ஹையலூரோனிக் அமிலம் இதற்கு உறுதுணையாக விளங்குகிறது. இந்த அமிலங்கள் சருமத்தில் அதிகம் சுரப்பதால் முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்கும் மற்றும் மேக்கப் குறையாமல் இருக்கும்.

Share this story