நோய்களை தீர்க்க உதவும் கோவைக்காயின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

கோவைக்காய் போலவே அதன் இலைகள், தண்டுகள், செடிகள் போன்றவற்றையும் பயன்படுத்தி உடலில் ஏற்படும் காயங்களிற்கும், ரத்த கசிவிற்கும், சொறி, சிரங்கிற்கும் பயன்படுத்த நல்ல பலனை தரும்.
செய்முறை :
கோவைக்காய் இலைகளை எடுத்து நீரில் நன்கு கழுவ வேண்டும். அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளுங்கள். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கோவைக்காய் இலையின் சாற்றினை கலந்து காய்ச்சி கொள்ளுங்கள். இதனை கால்களில் ஏற்படும் புண்கள், சிரங்கிற்கு பயன்படுத்துங்கள்.
கோவைக்காய் இலைகள் :
கோவைக்காய் இலைகளை மட்டும் அரைத்து சாற்றினை வாயில் இட்டு நன்கு கொப்பளிக்க பற்களில் இருக்கும் நுண்கிருமிகள் அழிந்து விடும் மற்றும் வாய்களில் இருக்கும் புண்களையும் குண படுத்தும். இலைகளை நன்கு சுத்தம் செய்த பின்னர் வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட வயிற்றில் ஏற்படும் கோளாறுகளும் அகலும், மார்பில் உண்டாகும் சளி தொல்லைகள் தீரும், அதானல் ஏற்படும் மார்பக வலிகள் குணம் ஆகும், நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது.
சருமத்தை பயன்படும் :
சருமத்தில் ஏற்படும் குறைபாடுகளை போக்கும் வல்லமை கொண்டது மற்றும் கோவைக்காயில் நச்சு தன்மையை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு உள்ளது. விரைவில் கிருமிகளை அண்ட விடாது. சருமத்தில் ஏற்படும் அரிப்புகளையும் அதனால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க கோவைக்காய் இலைகளை நீருடன் கலந்து கொதிக்க வைத்து பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
நீரழிவு நோய் :
நீரழிவு நோயில் இருந்து விடுபட நினைப்போர் தங்கள் உணவில் கோவைக்காயை சேர்த்து கொள்ளலாம் மற்றும் கல்லீரலுக்கு உறுதியை கொடுத்து எவ்வித கோளாறுகளும் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளும்.
குடலில் ஏற்படும் கோளாறுகளை குண படுத்தும் :
இலையையோ அல்லது காயையோ குழம்பு வைத்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிட குடல்களில் ஏற்படும் தொற்றுக்களை குண படுத்தும் மற்றும் குடல்களில் ஏற்படும் எரிச்சல், புண்கள், ரத்த கசிவை குண படுத்த உதவும் மருத்துவ குணங்களை கொண்டது உள்ளது.