குழந்தைகளுக்கான பழங்கள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்வோம்?

சிறு குழந்தைளுக்கு உணவு கொடுக்க ஆரம்பிக்கும் போதே திட பொருட்களாக கொடுக்காமல் திரவ நிலையில், நன்கு மசித்து அல்லது அரைத்து கொடுக்க வேண்டும்.
பழ வகையாக இருந்தாலுமே அதை மசித்தே கொடுங்கள், முக்கியமாக வாழை பழத்தை கண்டிப்பாக அப்படித்தான் கொடுக்க வேண்டும்.
சிறு வயதிலே ஆரோக்கிய உணவுகளையே கொடுத்து பழங்குங்கள் கேப்பை கூழ், ராகி உப்புமா, பயறு வகைகள், ஊட்டச்சத்து மிக்க உணவுகள்.
காய்கறிகள் சாப்பிட பழக்குங்கள் குழந்தைகளை, இதன் மூலம் தான் அவர்களுக்கு தேவையான அனைத்து புரோட்டீன்களும் கிடைக்கும்.
அவசரப்பட்டு சத்து என்ற பெயரில் எவ்வித உணவையும் அளிக்க வேண்டாம், மருத்துவரிடம் சிறப்பான ஆலோசனை கேட்டு செய்யுங்கள்.
பப்பாளி பழம் குழந்தைளுக்கு ஏற்றது, அதையும் நன்கு பிசைந்தே கொடுக்க வேண்டும் , தண்ணீர் அதிகம் பருக பழக்குங்கள்.
உணவை அவர்களுக்கு திணிக்க கூடாது.சப்போட்டா பழம் நல்ல ருசி மற்றும் சத்து உடையது. இதையும் குழந்தைளுக்கு விதைகளை நீக்கி விட்டு கொடுக்கலாம்.