Tamil Wealth

பார்வையை பாதிக்கும் நோய்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !

பார்வையை பாதிக்கும் நோய்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !

கண்களில் ஏற்படும் சிறு பாதிப்புகள் கூட கண் பார்வையையே இழக்கும் அபாயம் உள்ளது. ஆகவே எந்த நோய் வந்தாலும் மருத்துவரின் ஆலோசனையை கேட்பது சிறந்தது.

எந்த நோய்கள் இருந்தால் கண்கள் பாதிக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்!

சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, உடல் எடையும் அதிகரிக்கும், இதனால் கண்களில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணில் குறைபாடுகள் ஏற்படும்.

கர்ப்பிணி பெண்களுக்கு விழித்திரையில் பாதிப்புகள் ஏற்பட்டு கண் பார்வையையே இழக்க நேரிடும்.

ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவு உடல் எடையை கூடுவதால் கண்களில் இருக்கும் நரம்புகள் பாதிக்க பட்டு ரத்த கசிவுகள் ஏற்படும் அல்லது ரத்த குழாய்கள் உடைந்து புதிய குழாய்கள் உருவாகினால் கண்களில் பாதிப்புகள் உருவாகும்.

விழித்திரையில் இருக்கும் ரெட்டினா சிறிது பாதிப்பு அடைந்தாலும் அது கண்களில் மிக பெரிய கோளாறுகளை ஏற்படுத்தும் அளவிற்கு சென்று விடும்.

மேற்கூறிய குறைபாடுகளை போக்க நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

  • அதிக கலோரிகள் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்
  • ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்
  • ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்க வேண்டும்
  • உடல் எடையை சீராக வைத்து கொள்ள வேண்டும்
  • கண்களில் ஏற்படும் சிறு பாதிப்பை கூட அலட்சியமாக விட கூடாது.

கண்களில் ஏற்படும் பாதிப்புகள் :

  • கண் பார்வை மங்கும்
  • கண்களில் திட்டுகள் உருவாகும்
  • கண்கள் சிவந்த நிலையில் இருந்தால்
  • கண் வலி, அலற்சி, எரிச்சல்

Share this story