Tamil Wealth

மருத்துவ குணங்களை கொண்ட கொத்தவரங்காய்!!

மருத்துவ குணங்களை கொண்ட கொத்தவரங்காய்!!

பச்சை நிறத்தில் ஒல்லியான தோற்றம் கொண்டது தான் கொத்தவரங்காய். இது நமக்கு கொடுக்கும் அற்புத பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கொத்தவரங்காய் மருத்துவம் :

வயதான பிறகு நமக்கு சருமத்தில் ஏற்படும் சுருக்கம், மடிப்புகள் அனைத்திற்கும் உதவும் வகையில் பயன்படும்  கொத்தவரங்காயை சமையலில் சேர்த்து கொள்ள அதில்  அதிக அளவில் காண படும் துத்தநாகம், காப்பர் மற்றும் புரதச்சத்துக்கள் நமக்கு நன்மை பயக்க கூடியது.

  • சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்கும் தன்மை கொண்ட ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் கொத்தவரங்காயில் காணப்படுகின்றன.
  • வலிமை இழந்த எலும்புகளுக்கு வலு ஊட்டவும் மற்றும் பல் கூச்சம், பற்களில் வலி, பற்சிதைவு போன்ற அனைத்து கோளாறுகளுக்கும் நல்ல தீர்வை தர கூடியது.
  • ஃப்ரீ ராடிக்கல்கள் என்பது நமது உடலில் புற்று நோய்க்கான செல்களை உருவாக்க கூடியது. இதனை உருவாக்காமல் நம்மை தற்காத்து கொள்கிறது இந்த கொத்தவரங்காய்.
  • கொத்தவரங்காயில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் சத்து அனைத்தும் நமது உடலில்  இருக்கும் தேவையற்ற கலோரிகளை வெளியேற்றும்.

Share this story