Tamil Wealth

அலோபதி மருந்துகளால் ஏற்படும் அபாயத்தை தெரிந்து, உபயோகிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்!

அலோபதி மருந்துகளால் ஏற்படும் அபாயத்தை தெரிந்து, உபயோகிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்!

உடல் வலிகளுக்கும் மற்றும் தலை வலிகளுக்கும், கிடைக்கும் மாத்திரைகளை விழுங்கும் பழக்கம் கொண்டவர்களே, உங்களுக்காகவே இந்த பதிவு, மாத்திரை விழுங்குவதால் அந்நேரம் மட்டுமே நிவாரணம் கொடுக்கும். அதன் பின்னரே அது ஏற்படும் விளைவுகள் தெரியும்.

நீங்கள் எடுத்து கொள்ளும் மாத்திரைகள் உங்களுக்கு கொடுக்கும் அபாயத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

#1
ஒவ்வொருத்தரும் வேறு வேறு குணாதியசங்களை கொண்டவர்கள். தாங்கள் எடுத்து கொள்ளும் மாத்திரையில் அதிக டோஸ் இருந்தால் விரைவில் குணம் ஆகும் என்று எண்ணுகிறார்கள், இது முற்றிலும் தவறான கருத்து. இது தெரியாமல் அதிக டோஸ் இருக்கும் மருந்துகளை எடுத்து கொள்வதால் உங்களின் உடல் உட்புற பாகங்கள் தங்கள் செயல் திறனை இழந்து, செயலற்று போகும் நிலை உருவாகும்.

#2
உங்கள் உடலில் பிரச்சனை என்றால் முதலில் மருத்துவரை தான் அணுக வேண்டும். அவர் உங்கள் உடல் நிலை முற்றிலும் குணம் ஆகும் வரை பரிந்துரைப்பார். ஆனால் நீங்கள் உங்கள் உடல் நிலை விரைவில் குணமாக்க, கிடைக்கும் மருந்துகளை எல்லாம் எடுத்து கொள்ள கூடாது. இது பல இன்னல்களை சந்திக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.

#3
உங்கள் உடல் வாகுவிற்கு ஏற்றவாறே டோஸ் எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல் உடல் கோளாறுகளை மருத்துவரின் ஆலோசனை படி கொடுக்கும் டோஸ் மருந்துகளை தான் உட்கொள்ள வேண்டும். நீங்கள் உபயோகிக்கும் ஒரு மருந்தையே அடிக்கடி உபயோகிக்க கூடாது, அந்த மருந்தின் காலாவதி காலம் முடிந்திருக்க கூடும்.

#4
உங்களுக்கும் மற்றொருவருக்கு ஒரே கோளாறுகள் இருந்தால் அவருடைய மாத்திரைகளை நீங்கள் எடுத்து கொள்ள கூடாது முற்றிலும் தவறான விஷயம். கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

#5
ஒரே மருத்துவரையே அணுகுவது நல்லது. நிறைய மருத்துவரிடம் செல்ல கூடாது. அவருக்கே உங்கள் குறைபாடுகளை பற்றி முழுதும் தெரியும், இன்னொரு மருத்துவர் கொடுக்கும் மாத்திரைகளையும் விழுங்க உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும்.

Share this story