புடலங்காய் கொடுக்கும் மருத்துவ நன்மைகள் தெரிந்து சாப்பிடலாமே!

புடலங்காய் தினமும் வேக வைத்து சமைத்து சாப்பிட நமக்கு கிடைக்கும் உடல் நல குறிப்புகளை தெரிந்து கொண்டு இனி சாப்பிட ஆரம்பியுங்கள்.
மஞ்சள் காமாலை :
மஞ்சள் காமாலையால் கண்களில் ஏற்படும் மஞ்சள் நிறத்தை போக்க புடலங்காயின் இலைகளை அரைத்து அதனுடன் மல்லி இலைகளையும் சேர்த்து கொள்ள குணம் ஆகும் மற்றும் உடலில் இருக்கும் சூட்டை தணிக்கவும் உதவுகிறது.
புடலங்காயின் வேர்கள் :
புடலங்காயின் இலைகளை போலவே அதன் வேர்களும் மருத்துவ குணங்கள் கொண்டவையே. இதன் வேர்களை நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து ஆரிய பின்னர் அருந்த மலச்சிக்க கோளாறுகள் நீங்கும் மற்றும் வயிற்றில் இருக்கும் நச்சு கிருமிகளை, பூச்சிகளை வெளியேற்றவும் மிகவும் பயன் உள்ளதாக கருத படுகிறது.
உடல் பருமன் :
உடலில் இருக்கும் உப்பை வெளியேற்ற தினமும் புடலங்காயை சம்மதித்து சாப்பிடலாம் மற்றும் உடலில் இருக்கும் கலோரிகளை எரிக்க பயன்படுகிறது, வியர்வை மூலமாக கெட்ட நீர்களை வெளியேற்றும்.
காய்ச்சல் :
அடிக்கடி காய்ச்சலால் அவதி படுவோர் புடலங்காயை நீருடன் கலந்து நன்கு கொதித்த பின்னர் வடிகட்டி அருந்த காய்ச்சல் குணம் ஆகும்.
நினைவாற்றல் :
தினம் புடலங்காயை பொறியல் அல்லது குழம்பு வைத்து சாப்பிட நல்ல நினைவாற்றலை கொடுக்கும் மற்றும் நீரழிவு நோயில் இருந்து விடு படலாம். உடலுக்கு தேவையான புத்துணர்வை கொடுத்து நம்மை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும் ஆற்றல் கொண்டது.