Tamil Wealth

பப்பாளியில் இருக்கும் தீமைகளையும் தெரிந்து கொண்டு, எப்பொழுதெல்லாம் சாப்பிட கூடாது என தெரிந்து கொள்ளுங்கள்!

பப்பாளியில் இருக்கும் தீமைகளையும் தெரிந்து கொண்டு, எப்பொழுதெல்லாம் சாப்பிட கூடாது என தெரிந்து கொள்ளுங்கள்!

பப்பாளி கொடுக்கும் ஆரோக்கியம் போலவே அதனை எப்பொழுது எல்லாம் சாப்பிட கூடாது என்பதையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.

பப்பாளியில் இருக்கும் பாப்பெயின் :

பாப்பெயின் இருக்கு பப்பாளி பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் இது அவர்களின் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகளின் உடல்களில் மாற்றங்களை காண நேரிடும். ஆகையால் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு கொள்வது நல்லது. பப்பாளி பழத்தை கரிப்பிணி பெண்கள் எப்போது சாப்பிட கூடாது எப்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று.

பென்சில், ஐசோடியோசனானேட் :

பப்பாளியில் இருக்கும் நன்மைகள் போலவே அதில் இருக்கும் பென்சில் மற்றும் ஐசோடியோசனானேட் போன்றவையும் இருக்கிறது, அதிகம் உட்கொள்ளும் பொழுது இவைகள் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மருந்துகளுடன் பப்பாளி :

நீங்கள் ரத்தத்தில் இருக்கும் சரக்கரை அளவினை கட்டு படுத்த மருத்துவரின் ஆலோசனை படி எடுத்து கொள்ளும் மருந்துகளுடன் பப்பாளி பழத்தையும் சேர்த்து கொள்ள கூடாது. ஏனென்றால் பப்பாளியும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டு படுத்தும். அதற்காக இரண்டையும் ஒன்றாக ஒரே வேளையில் உண்பதை தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

பப்பாளி காய் :

பப்பாளி பழம் பழுக்காமல் காயாய் இருக்கும் நிலையிலேயே அதனை சாப்பிட கூடாது, அந்த நிலையில் அதில் இருக்கும் பால் நம் கைகளில் பட்டால் கொப்பளங்கள் வர கூடும். சாப்பிடும் பொழுது அந்த பால் வாய்களில் பட்டு வாய்ப்புண்களை ஏற்படுத்தும்.

 

Share this story