கோவைக்காய் நன்மைகள் தெரியுமா?

கோவைக்காயில் அதிக ஊட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
கோவைக்காய் சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் இருக்கும் நச்சு கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது. ரத்த கசிவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. உடலின் உஷ்ணத்தால் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் கோவைக்காய் நல்ல பலனை தரும்.
பித்தத்தை கட்டுப்படுத்த கோவைக்காயை பயன்படுத்துங்கள் அதனுடன் மூல நோய்களுக்கும் நல்லதொரு அரு மருந்து.
சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் போக்கும் மற்றும் அதிக சளி தொல்லையால் ஏற்படும் இருமல், நெஞ்சில் சளி அடைத்து ஏற்படும் நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல் போன்றவற்றிக்கு விரைவில் குணம் அடைய செய்யும்.
மஞ்சள் காமாலை வராமல் நம்மை தற்காத்து கொள்ளும் மற்றும் ரத்தத்தை சுத்திகரித்து ரத்த சோகையில் இருந்து நம்மை விடு விக்கும்.
பூச்சி கடிகள் ஏற்படும் காயங்கள் மற்றும் ரத்த கட்டுதல், ரத்த கசிவு அனைத்திற்கும் கோவைக்காயின் இலைகளை பிழிந்து சாற்றை இடுவதன் மூலம் விரைவில் பலனை காணலாம்.
கோவைக்காயை துண்டுகளாக வெட்டி அதனுடன் தயிர் அல்லது மோர் கலந்து அரைத்து குடிக்க நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.