உடலில் இருக்கும் ரத்த குழாய்களை சுத்திகரிக்கும் சில வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாமா?

ரத்த குழாய்களில் பாதிப்புகள் எதுவும் அண்டாமல் இருக்க நாம் எடுத்து கொள்ள வேண்டிய சில உணவுகளை காணலாம்.
பழங்களில் எது சாப்பிடலாம் :
பழங்களில் சிவப்பு நிற தோற்றத்தை கொண்ட அனைத்து பழங்களிலுமே ஆன்டி ஆகிஸிடண்டுகள் அதிக அளவில் காண படுவதால் தினம் ஒரு பழம் சாப்பிடுங்கள். இவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மற்றும் ரத்த நாளங்களில் படியும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும் தன்மை சிவப்பு நிற பழங்களுக்கு உள்ளது.
செய்முறை : 1
மாதுளை பழத்தின் விதைகளை தனியே எடுத்து அதனுடன் இதர சிவப்பு நிற பழங்களையும் சேர்த்து உண்ணலாம் அல்லது சிவப்பு நிற பழங்களை ஒன்றாக அரைத்து ஜூஸ் செய்து தினம் குடித்து வரலாம். பழத்துடன் தேன் மற்றும் சிறிதளவு எலும்பிச்சை சாற்றினையும் கலந்து குடிக்க ரத்த நாளங்கள் மிகவும் சுத்திகரிக்க படும்.
செய்முறை : 2
நாம் தினமும் அருந்தும் காப்பிக்கு பதிலாக ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் இருக்கும் கிரீன் டீயை குடிக்க நல்ல பலனை கொடுக்கும்.
பாத்திரத்தில் தேவையான நீரினை எடுத்து கொண்டு அதனை சூடு படுத்த வேண்டும். நீருடன் கிரீன் டீ கலந்து கொள்ளுங்கள். இனிப்பு சுவைக்கு சர்க்கரை அல்லது தேனை கலந்து கொள்ளலாம். பின்னர் கொதித்தவுடன் இறக்கவும். இது கோடைகாலங்களில் விட குளிர்காலங்களில் குடிக்க நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். தினம் இந்த டீயை இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வர ரத்த நாளங்களில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் கட்டுப்படுத்த படும்.