எடையை குறைக்க நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

உடல் பருமனால் தான் அதிக நோய்களுக்கு உள்ளாக்குகிறோம். இதனால் மாரடைப்பு. இதய கோளாறுகள் ஏற்பட்டு உயிரை பறிக்கும் அபாயம் இருக்க கூடும்.
#1
நாம் தினம் செய்யும் செயல்களில் இருந்து வெளிப்படும் வியர்வையின் மூலமும் உடலில் இருக்கும் நீர் வெளியேறும். இதனால் உங்கள் உடல் எடை குறையும் மற்றும் உடல் பருமனால் உடலில் இருக்கும் வலிகள், கெட்ட நீர்கள் வெளியேறி பராமரிக்கும்.
தினம் நீங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் எடையை குறைப்பது போலவே உடலுக்கு தேவையான அசைவுகளையும் கொடுத்து ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளவும் உதவி புரிகிறது.
உடல் நலனை கொடுக்க நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, கை, கால்களை நன்கு அசைக்கும் படியான முயற்சிகளை மேற்கொண்டு பலனை பெறுங்கள்.
#2
நீரினை அதிகம் அருந்த பழகுங்கள். இதனால் உங்கள் உடலில் இருக்கும் நீர் சத்துக்கள் குறைவு நிவர்த்தி ஆகி, நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேற்றும். நச்சுக்கள் வெளியேறுவதால் உடல் எடை குறைத்து உடல் ஆரோக்கியத்தை பெறலாம் மற்றும் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை போக்கி சருமத்தையும் பராமரிக்கும்.
#3
உங்களுக்கு தேவையான தூக்கத்தை எடுத்து கொள்ளுங்கள். நல்ல தூக்கம் மிகவும் அவசியம், அதேப்போல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே வேலை செய்பவர்கள் அவ்வப்போது எழுந்து நடக்கலாம். தினமும் காலை உடற்பயிற்சியை செய்யுங்கள். ஒரே இடத்தில் அமர்வதால் கொழுப்புகள் அதிகம் சேரும் வாய்ப்பு உள்ளது, ஆகவே எடுத்து கொள்ளும் உணவுகளிலும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.
#4
உடல் பருமனை குறைக்க மிகவும் அவசியம் நார் சத்துக்கள் இருக்கும் உணவுகளையே அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். நார் சத்துக்கள் இருக்கும் பழங்கள், காய்கறிகள், சத்து மிக்க தானிய வகைகளை சாப்பிடுங்கள். இது உடலில் இருக்கும் கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டமையால் பயப்படாமல் சாப்பிடலாம் எவ்வித விளைவுகளும் வராது.
#5
நொறுக்கு தீனிகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் அதிகம் உப்பு இருக்கும் உணவு பொருட்களை சாப்பிட்டால் உடலில் இருக்கும் நீரினை அப்படியே தக்க வைத்துக்கொள்ளும் இதனால் உங்கள் எடை அதிகரிக்கும்.