Tamil Wealth

நம்மை பாதிக்கும் சில பழக்க வழக்கத்தை தெரிந்து கொள்ளலாமா ?

நம்மை பாதிக்கும் சில பழக்க வழக்கத்தை தெரிந்து கொள்ளலாமா ?
நாம் செய்யும் சில செயல்களில் கூட நமக்கு தீமைகள் உருவாகும் அபாயம் உள்ளது.

சர்க்கரை நோயை உண்டாக்கும் பழக்கம் :

ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே ஸ்னாக்ஸ் வகைகளை உட்கொள்வதால் உடலில் அதிக கொழுப்புகள் சேரும் மற்றும் சர்க்கரை வியாதிக்கும் வழிவகுக்கும். அதிகம் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள், இதனால் உங்கள் உடல் அசையாமல் இருக்கும், இது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தி உடல் பருமனை அதிகரிக்கும்.

மாத்திரைகள் :

உடலில் ஏற்படும் வலிகளை போக்க கிடைக்கும் மாத்திரைகளை எல்லாம் விழுங்க கூடாது. இது ஒருவித போதை நிலைமையை உருவாக்கும். எந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்றாலும் மருத்துவரிடம் ஆலோசித்து பின்னரே உபயோகிக்க வேண்டும்.

புகை மற்றும் குடி பழக்கம் :

குடி பழக்கத்தை கொண்டவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் இருப்பார்கள், அவர்கள் அதற்கு அடிமையாகி இருப்பார்கள், அவர்கள் குடி பழக்கத்தை விட வேண்டும், இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, அதேப்போல் தான் புகை பிடிக்கும் பழக்கமும் இது முதலில் நுரையீரலை பாதிக்கும்.

மன அழுத்தம் :

சிறு விஷயங்களுக்கு கூட அதிகமான கோபம், மன அழுத்தம், எரிச்சல் உண்டாவதை குறைக்க வேண்டும், இதனால் இதயம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். அதிக கோபம் அல்லது மன அழுத்தம் வரும் பொழுது உங்கள் சிந்தனையை மாற்றுங்கள், இது உங்கள் மன நிலையை மாற்றும்.

உணவு பழக்கம் :

நீங்கள் உட்கொள்ளும் உணவுகளில் மிகுந்த கவனம் தேவை. எப்பொழுதும் வாயில் ஏதேனும் சுவைத்து கொண்டே இருக்க கூடாது, ஆரோக்கியம் உள்ள உணவுகளையே உட்கொள்ள வேண்டும். அதிகம் கொலஸ்ட்ரால் இருக்கும் உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

செலவு :

நீங்கள் செலவு செய்யும் பணம் உபயோகம் உள்ளதாக இருக்க வேண்டும். தேவை இல்லாத பொருட்களை வாங்கி வீணாக்க கூடாது. வீணாக்கினால் அது உங்கள் மன நிலையை பாதிக்கும் மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

Share this story