அழகை தரும் ஆலிவ் எண்ணெய் தெரியுமா???

ஆலிவ் எண்ணெய் உடலுக்கு கொடுக்கும் ஆரோக்கியம் போலவே தலை முடிக்கும் கொடுக்கிறது. இந்த எண்ணெயை முடிகளில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க தலையில் இருக்கும் பொடுகுகள் நீங்கி நல்ல முடி வளர்ச்சியை கொடுக்கும். முடி கொட்டுவதும் கட்டுக்குள் வரும். இப்படி செய்வதால் முடி வளர்ச்சி மட்டுமல்லாமல் உடலில் சூட்டை தனித்து புத்துணர்ச்சியையும் கொடுக்கும் திறன் கொண்டது இந்த எண்ணெய்.
தலை முடி நல்ல கருமை நிறத்தில் தோற்றம் அளிக்கும்.
முகத்தில் எண்ணெயை தேய்த்து பின் தண்ணீரால் நன்கு கழுவி வர கண்களிற்கு கீழ் வரும் கருவளையம் மறைந்து அழகான பொலிவு பெறுவீர்கள்.
ஆலிவ் எண்ணெயை கை மற்றும் கால்களில் இருக்கும் நகங்களின் இடுக்குகளில் தொடர்ந்து தேய்த்து வர உடல் சூட்டால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் வராமல் பார்த்துக்கொள்ளலாம். மோசமான சருமத்தை கொண்டவர்கள் ஆலிவ் எண்ணெயுடன் எலும்பிச்சை சாற்றை கலந்து தினம் பயன்படுத்த உடல் நல்ல பொலிவு பெறுவதுடன் நல்ல வழு வழுப்பான தன்மையையும் கொடுக்கும்.