வயதானவர்களுக்கு உதவும் சிகிச்சையை பற்றி தெரியுமா?

வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் சரும சுருக்கங்கள் அவர்கள் அழகையே கெடுத்து விடும். அவர்கள் என்றும் இளமையுடன் இருக்க பல பொருட்களை கையாளுகிறார்கள், இதற்கு பதிலாக இன்றைய நாகரீகத்தில் இருக்கும் சிகிச்சை கொலாஜன் ரீ மாடலிங்க் என்பதாகும்.
சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் ப்ரீ ரேடிக்கல் என்பதே. இந்த சிகிச்சையை பற்றி நீங்கள் பயப்பட தேவை இல்லை, இது மிகவும் எளிதான முறை, அறுவை சிகிச்சை இல்லை, சருமத்தினை மிருதுவாக வைத்து கொள்ள உதவுகிறது. மருத்துவர்களின் சோதனைக்கு பிறகே இதனை அறிமுக படுத்தினார்கள். இந்த சிகிச்சையை மேற்கொண்ட பிறகு சருமத்தில் இருக்கும் பருக்கள், சுருக்கங்கள், கோடுகள், எண்ணெய் சருமம் போன்ற கோளாறுகள் அனைத்தும் தீர்ந்து பொலிவான சருமத்தை கொடுத்து என்றும் இளமையுடன் வைத்து கொள்ளும்.
சிகிச்சை :
சருமத்தில் இருக்கும் கொலாஜன் சருமத்திற்கு எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது. இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் வலிகள் ஏற்படாது மற்றும் மற்ற சிகிச்சைகள் போடோக்ஸ், பில்லேர்ஸ், மைக்ரோ நீடலிங் , ரேடியோ பிரெகுவேன்சி போன்றவைகளை விட நல்ல பலனை கொடுக்கும்.
இந்த சிகிச்சையை அனைவரும் செய்யலாமா ?
இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது, ஒவ்வொருத்தரின் வயதை பொறுத்தே சிகிச்சையை செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட வயதில் ஏற்படும் சுருக்கங்களை போக்கவும் மற்றும் 30 வயது ஆனவர்களுக்கு, அதற்கு முன் சருமத்தில் உங்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை போக்கினாலும் உங்கள் சருமத்தை பராமரித்து விரைவில் வயது முதிர்ந்த தோற்றத்தை கொடுக்காது.
சிகிச்சையை மேற்கொள்ள கிடைக்கும் நன்மைகள் :
சருமத்தில் உருவாகும் பருக்களை போக்கி அதனால் உருவாகும் தழும்புகளையும் நீக்கும் ஆற்றல் கொண்டது.
வயதானவர்களுக்கு இருக்கும் சுருக்கங்களையும், கோடுகளையும் நீக்கி மிருதுவான சருமத்தை கொடுத்து அழகான தோற்றம் கொடுக்கும்.
சூரியனின் தாக்கத்தினால் உருவாகும் சரும கோளாறுகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.
இந்த சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனை படி மேற்கொண்டு அதன் பயன்களை சிறிது நாட்களில் காணலாம் மற்றும் இந்த முறையில் சுருக்கங்கள், கோடுகள் விரைவில் மறைந்து மெலஸ்மா என்ற பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்கிறது.
மேற்கூறிய முறைகளை செய்வதோடு நல்ல சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டும். பழங்களை ஜூஸ் செய்து தினம் குடிக்க மற்றும் சீரான உடற்பயிற்சி போன்றவை செய்வதால் நல்ல பலனை கொடுக்கும்.