கிழங்கின் மருத்துவம் பற்றி தெரியுமா ?????

கிழங்குகள் நம் அன்றாட உணவில் பயன்பட கூடியதே. கிழங்குகளில் நிறையவே இருக்கிறது.அதில் சிலவற்றை பார்க்கலாம்.
பனங்கிழங்கு:
பனங்கிழங்கை உடலில் எடையை அதிகரிக்க வேண்டும் என்று எண்ணுவோர் வேக வைத்து சாப்பிடலாம்.
வேக வைத்து பின் அதை தாளித்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறுவதோடு மலச்சிக்கல் பிரச்சனையும் போக்கும்.
இதை இனிப்பு சுவையுடன் உண்ண வேண்டும் என்று நினைத்தால் சர்க்கரை அல்லது கருப்பட்டி, வெல்லம் கலந்து தினம் சாப்பிட தசைகள் நல்ல வலு பெரும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
உடலின் ஒட்டு மொத்த உறுப்புகளும் வலு பெற்று சீராக இயங்க வேண்டும் என்று விரும்பினால் பனங்கிழங்கை அவித்து அதனுடன் தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பால் சேர்த்து உண்ணலாம்.
மரவள்ளிக்கிழங்கு:
இதில் அதிக அளவிலே புரதம், கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன.
உடல் குளிர்ச்சிக்கு சாப்பிடலாம், உணவிற்கு ருசி கொடுக்கும் வகையிலும் பயன்படுகிறது.
மருந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளிலும் அதிகமாக பயன்படும் மரவள்ளிக்கிழங்கு குளுகோஸாகவும் மாற்ற முடியும்.