இரவு நேரத்தில் சாப்பிடக் கூடிய நொறுக்கு தீனிகள் பற்றி தெரியுமா?

இரவு நேரத்தில் சாப்பிடக் கூடிய நொறுக்கு தீனிகள் பற்றி தெரியுமா?

பொதுவாக இரவு உணவு முடிந்த பின்னர் ஏற்படும் சிறிதளவு பசியை குறைக்க நொறுக்கு தீனிகளை சாப்பிடுவார்கள் பலர். ஆனால் இதை சாப்பிடும் போது தூக்கமின்மை மற்றும் செரிமான பிரச்சனை போன்றவைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் நீங்கள் பசியோடு தூங்க தேவை இல்லை. அதை சரி செய்ய சில நொறுக்கு தீனிகளை மாற்றினால் போதுமானது அவற்றை இப்போது பார்க்கலாம்.

இரவு நேரத்தில் சாப்பிடக் கூடிய நொறுக்கு தீனிகள்:-

  • ஓட்ஸ் அல்லது கார்ன் போன்ற உணவுகளை பாலில் கலந்து சாப்பிட்டால் அது விரைவில் ஜீரணமாகி விடும். இதனால் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.
  • யோகர்டை2 ஒரு கப் அளவுக்கு சாப்பிட்டால் வயிறு பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
  • ஆப்பிள், மாதுளை, வாழை போன்ற பழங்களை சாலட்டாக செய்து சாப்பிட்டாலும் நல்ல தூக்கத்தினை பெற முடியும்.
  • மீனை உணவாக எடுத்து கொள்ளலாம். இதில் அதிக அளவிலான கொழுப்பு இல்லாததால் உடலுக்கு எந்த தீங்கும் கிடையாது.
  • கேரட் மற்றும் வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி சாலட் செய்து சாப்பிடலாம்..

Share this story