Tamil Wealth

கழிவறையை சுத்தமாக வைக்க வேண்டும்!

கழிவறையை சுத்தமாக வைக்க வேண்டும்!

கழிவறையை சுத்தம் செய்வது சிலர் அருவருப்பாக நினைக்கிறார்கள். கழிவறையை கட்டாயம் வாரத்திற்கு இரு முறை சுத்தம் செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அதற்கான பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதை மறவாதீர்கள்.

கழிவறையை சுத்தம் செய்யும் முறைகள் தெரிந்து கொண்டு செயல் படுவோம் :

கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் கழிப்பறையை மட்டும் செய்ய கூடாது அங்கிருக்கும் பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும். கழிவறையின் தரைகளை முழுதும் சுத்தம் செய்ய வேண்டும். நம் கால்களின் மூலம் நோய் தொற்றுகள் பரவும். தரைகளை சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்.

கழிவறையை சுத்தம் செய்ய எலும்பிச்சையை பயன்படுத்தலாம் மற்றும் கழிவறையின் சுவர்களையும் பராமரிக்க வேண்டும்.

முக்கியமானது நாம் உபயோகிக்கும் நீர் இருக்கும் பாத்திரங்கள் அல்லது தொட்டிகளை பாதுகாப்பது, ஏனென்றால் நீரினை கண்டாலே கொசுக்கள், ஈக்கள் அனைத்தும் சென்று அசுத்தத்தை ஏற்படுத்துகிறது அதனால் உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் நீர் இருக்கும் இடத்தை மூடியே வைக்க வேண்டும்.

Share this story