Tamil Wealth

உங்கள் முடியின் நிறத்தை மாற்றும் தன்மை கொண்ட குப்பை மேனி!

உங்கள் முடியின் நிறத்தை மாற்றும் தன்மை கொண்ட குப்பை மேனி!

முகத்தின் அழகிற்கு பயன்படும் மற்ற சாதன பொருட்களை தவிர்த்து வீட்டில் இருக்கும் காய்கறிகள், கீரைகளை கொண்டு மேனியை அழகு படுத்த தெரிந்து கொள்ளுங்கள். குப்பை மேனியை கொண்டு உங்கள் முடி வளர்ச்சி மற்றும் அழகான கூந்தலை பெற நீங்கள் செய்ய வேண்டிய முறைகள் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள் :

குப்பை மேனி கீரை – 1/2 கப்
வெங்காயம் – 2
எண்ணெய் -சிறிதளவு

முதலில் வெங்காயத்தை தோலை உரித்து கழுவி பின் துண்டு துண்டுக்களாக நறுக்கி மிக்ஸியில் நன்கு அரைத்து அதன் சாற்றினை தனியே பிரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள். குப்பை மேனி கீரையின் இலைகளை எடுத்து நீரில் நன்கு அலச வேண்டும், பின் இதனை அரைத்து அதன் சாற்றினை எடுக்கலாம் அல்லது இலைகளை பாத்திரத்தில் வைத்து நன்கு காய்ச்சி அந்த நீரினை நன்கு வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். வெங்காயத்தில் இருந்து கிடைத்த சாற்றினையும் குப்பை மேனியின் சாற்றினையும் கலந்து, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடான பிறகு மேற்கூறிய கலவையை அதனுடன் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும், இப்பொழுது நமக்கு தேவையான குப்பை மேனி பேசியல் தயார்.

உபயோகிக்கும் முறை :

எண்ணெயில் தாளித்ததால் இதனை ஒரு வாரத்திற்கு மேல் பயன்படுத்த குளிர்சாதன பெட்டியில் வைத்து கொள்ளலாம்.
வாரத்திற்கு இரு முறை இதனை தலை முழுவதும் வேர் நுனி வரை நன்கு தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இது முடி உதிர்வை கட்டுக்குள் வைக்கும் மற்றும் நரை முடி வருவதை தடுத்து கருமை நிறமாக மாற்றும் வல்லமை கொண்டது.

Share this story