கைபேசியை அதிகம் உபயோகிப்பதை தவிர்ப்பதே நல்லது!

கைபேசியினை உபயோகிப்பத :
அனைத்து விதமான கைபேசிகளையும் அதிக வெளிச்சத்துடன் உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள். முக்கியமாக இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாமல் இருட்டில் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அது நம் கண்களில் இருக்கும் விழித்திரை, கருவிழி என அனைத்தையும் பாதித்து கண் தெரியாத நிலைக்கு தள்ளி விடும் அபாயத்தை கொண்டு உள்ளது. அதேப்போல் கைபேசியில் இருந்தும் வரும் வெப்பத்தினால் உடலில் இருக்கும் உறுப்புகளை பாதிக்கும் முக்கியமாக கை நரம்புகளை பாதிக்கும். அதிமாக விரல்களை கொண்டு பயன்படுத்த விரல்கள் வலு இழந்து நின்று விடும் விளைவு உண்டாகும்.
கைப்பேசிகளில் சேர்ந்து பயன்படுத்தும் ஹெட்செட்டை காதில் சேர்த்து கொள்ள காதுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி செவி திறனை பாதித்து கேட்கும் திறனை இழக்க செய்யும். அதிக நேரம் கைபேசியை காதில் வைத்து பேசி கொண்டே இருக்க செவிகள் பாதிக்க பட்டு ஆபத்தை ஏற்படுத்தும், காதில் இருந்து ரத்தம் வரலாம் அல்லது திடீர் என்று கைபேசி வெடிக்கும் நிலை உருவாகி கைகளில் விரல்களை இழக்கும் அபாயமும் ஏற்படும்.