இனிப்பு சுவைக்கு அதிகம் எடுத்து கொள்ளும் சரக்கரையை தவிர்ப்பது நல்லது!
Sep 25, 2017, 19:45 IST

அதிகமாக சர்க்கரையை எடுத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் மற்றும் நோய்களுக்கு தள்ளும்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இனிப்பு சுவை அதிகமே பிடிக்கும், கார உணவுகள் சாப்பிட்டாலோ அல்லது மாத்திரை விழுங்கினால் கூட சிறிது சர்க்கரையை வாயில் இட்டு கொள்வார்கள்.
சர்க்கரைக்கு பதிலாக மற்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம். உடற்பயிற்சி செய்பவர்கள் சர்க்கரையை அதிகம் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். - சாப்பிட சில நேரங்களிலே ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும், அது நீங்கள் சாப்பிட்டு மூன்று அல்லது ஐந்து மணி நேரங்கள் கழிந்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் சாப்பிடலாம் அதிலும் ஜங்க் உணவுகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், அதற்கு பதிலாக முளை கட்டிய தானியங்கள், பயறு வகைகளை சாப்பிடலாம்.
- சர்க்கரையை தவிர்க்க கடைகளில் விற்பனை ஆகும் சுகர் பிரியை சாப்பிட்டு முடித்த பின்னர் எடுத்து கொள்ள வேண்டும், இது உங்களுக்கு சர்க்கரையை அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு வராது.
- வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது வாயில் ஏதேனும் சுவைத்து கொண்டு இருந்தால் தூக்கம் வராது என்பதற்காக சர்க்கரையை சுவைக்கும் பழக்கம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இது மூளைக்கு தேவையான ஆக்ஸிஜனை தடுக்கும்.
- சர்க்கரை என்றாலே சர்க்கரை வியாதி தான் ஞாபகத்திற்கு வரும். இதனை சரி செய்ய பட்டையை நீரில் போட்டு நன்கு கொதிக்க செய்து பின் அந்த நீரினை மட்டும் வடிகட்டி குடிக்க வேண்டும்.
- பச்சை காய்கறிகளை உண்ணலாம் மற்றும் பழ வகைகளை எடுத்து கொள்ளுங்கள். தண்ணீரை அதிகம் அருந்த, இதனால் உங்கள் மன நிலை மாறும் வாய்ப்பு உள்ளது. செயற்கை முறையில் உருவான சர்க்கரைகளை அறவே தவிர்ப்பது நல்லது.